Wednesday, December 5, 2007

வேலில போற எதையோ எடுத்து ........

சும்மா எழுத நிறைய விஷயம் இருக்குங்க .

சரி இன்னைக்கு ஒரு விஷயம் ...

வேலில போற எதையோ எடுத்து ........

கடந்த ஐந்து வருசமா நமக்கு டிவி பார்க்கிற பாக்கியம் இல்லங்க .
(அதுவே ஒரு பாக்கியம் தான்.)
அதிசியமா இருக்காங்க நம்ம இருப்பிடமே டிவி பெட்டி அளவு தானுங்க அது தான் டிவி வாங்கல .டேய் போதும்டா சும்மா உன்னை பத்தி சொன்னதுங்கரிங்க .

விஷயம் என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு .

காலைல கண்ணு முளிக்காத முன்னாடி நம்ம கை ரிமோட் தேடுது எடுத்து டிவிய போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா யாராவது கவர்ச்சி நடனம் ஆடிட்டு இருக்காங்க .
(காலைல ஏழு மணிக்கு பார்த்துட்டு இல்லன்னு சொல்லி கோபபடக் கூடாது.) நான் சொல்லறது ஒரு நாலு மணி அஞ்சு மணி போல . இது மாதிரி பாட்டா பார்த்தா அப்புறம் அந்த நாள் .......... இங்க தான் நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும் நம்ம தமிழ் மரபு காக்க பட வேணும்னு நாள் ஆரம்பம் ஆகிற ஆறு மணிக்கு பக்தி பாடல்கள் போட ஆரம்பிச்சுடுவாங்க . அதுக்கு முன்ன பின்ன என்ன போட்டாலும் நீங்க கண்டுக்க கூடாது .

அப்புறம் இருக்கவே இருக்கு கிரகம் பெல் கண்டுபிடிச்ச கருவி மொக்கைய போடு போடுனு போடுவாங்க ....நெடுந்தொடர் குருன்தொடர் இது எல்லாம் முடுஞ்சு இப்போ ஒரு கூத்து அட அதுதாங்க நம்ம ஊருல வருசத்துக்கு ஒரு தடவ மாரியம்மன் கோவில் நோம்பிக்கு போடுவம் இல்ல ஆடல் பாடல் அப்புறம் இந்த ரெகார்ட் dance இது எல்லாம் இப்போ நம போய் பார்க்க வேண்டாம் அது தானா வர வாரம் உங்க வீடு தேடி வருது.இந்த கொடுமைய குடும்பத்தோட வேற உர்கந்து பார்க்கணும்னு தலைஎழுத்து .

சரி புலம்பாதே ....விடு டிவி பார்க்காதனு நீங்க சொல்லறது தெரியுது.அத தானுங்க சொல்ல வந்தேன் நானா " வேலில போற எதையோ எடுத்து ........ "இந்த பழமொழி
தெரியாதாவங்க நல்லது தான் தெரிஞ்சா அப்புறம் நீங்களும் இப்படி தான் சொல்லுவீங்க ......

No comments: