Thursday, December 13, 2007

ஆணி புடுங்குதல் ஒரு ஆய்வு .....

ஆணி புடுங்குதல் ஒரு ஆய்வு .....

நமக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க எப்படியாவது டாக்டர் பட்டம் வாங்கனும்னு .
நாம என்ன அழகிய தமிழ்மகன் விஜயா இல்ல எதாவது அரசியல் கட்சி தலைவரா
எதாவது பல்கலைகழகத்துல கூப்பிட்டு டாக்டர் பட்டம் கொடுக்க .

எதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுதினா கிடைக்கும்னு சொன்னாங்க சரி எழுதலாம்னு நினைச்சா,கட்டுரை எழுதற அளவுக்கு நமக்கு தெரிஞ்ச விஷயம் ஆணி புடுங்கறது தான் அதை பத்தியே எழுதிடுவோம்னு ஆரம்பிச்சிட்டேன்.

ஆணி புடுங்கரதுல பல ரகம் இருக்குங்க .

நம்ம நண்பர்கள் ஜெயகாந்த் ,ஜெகதீஷ் ,மோகன் இவங்க இந்த மாதிரி ஆணி புடுங்கரதுல ரொம்ப பெரிய அளுக அதனால அவங்க சொன்னத நான் சுருக்கி உங்களுக்கு சொல்லறேன் .

௧. ஆணி புடுங்கரமோ இல்லையோ எப்பவும் சுத்தி* ஒன்ன கையில வச்சுக்கணும் .

௨.ரொம்ப சுலபமா புடிங்கிட்டா கூட அத யார்கிட்டயும் சொல்ல கூடாது .

௩.சில ஆணிகள புடுங்க முடியாது அதுக்காக நாம முடியாதுன்னு சொல்ல கூடாது
எனக்கு சுத்தி வேணும் கடப்பாரை வேணும்னு எதாவது சொல்லிடு இருக்கணும்
கடைசில ஆணி அடிச்சவன் சரியா அடிக்கல ஆவான் தான் புடுங்கனும்னு சொல்லிடனும் .

௪.அப்புறம் ஆணி புடுங்கும் போது சில பல விசயங்கள கவனிக்கணும் நாம ஆணி புடுங்கரமோ இல்லையோ அத பண்ணிட்டு இருக்கேன் இத பண்ணிட்டு இருக்கேனு தகவல்* சொல்லிட்டு இருக்கனும் .

௫.சில நேரங்கள புடுங்க ஆணி இருக்காது அப்போ இருக்கிற ஒன்னு ரெண்டு ஆணிய கவனமா மெதுவா புடுங்கனும் .

௬ .அப்புறம் முக்கியாயமான ஒரு விஷயம் ஆணி புடுங்க ரொம்ப நேரம் பண்ணுங்க தேவை இல்லாம உங்க கிட்ட யாரும் ஆணி புடுங்க சொல்ல மாட்டாங்க .

சுத்தி* ---நோட்புக் .
தகவல்* ----மெயில் .
ஆணி புடுங்குதல் ---வேலை செய்தல் .

ஆய்வு தொடரும் ........

Wednesday, December 5, 2007

வேலில போற எதையோ எடுத்து ........

சும்மா எழுத நிறைய விஷயம் இருக்குங்க .

சரி இன்னைக்கு ஒரு விஷயம் ...

வேலில போற எதையோ எடுத்து ........

கடந்த ஐந்து வருசமா நமக்கு டிவி பார்க்கிற பாக்கியம் இல்லங்க .
(அதுவே ஒரு பாக்கியம் தான்.)
அதிசியமா இருக்காங்க நம்ம இருப்பிடமே டிவி பெட்டி அளவு தானுங்க அது தான் டிவி வாங்கல .டேய் போதும்டா சும்மா உன்னை பத்தி சொன்னதுங்கரிங்க .

விஷயம் என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு .

காலைல கண்ணு முளிக்காத முன்னாடி நம்ம கை ரிமோட் தேடுது எடுத்து டிவிய போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா யாராவது கவர்ச்சி நடனம் ஆடிட்டு இருக்காங்க .
(காலைல ஏழு மணிக்கு பார்த்துட்டு இல்லன்னு சொல்லி கோபபடக் கூடாது.) நான் சொல்லறது ஒரு நாலு மணி அஞ்சு மணி போல . இது மாதிரி பாட்டா பார்த்தா அப்புறம் அந்த நாள் .......... இங்க தான் நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும் நம்ம தமிழ் மரபு காக்க பட வேணும்னு நாள் ஆரம்பம் ஆகிற ஆறு மணிக்கு பக்தி பாடல்கள் போட ஆரம்பிச்சுடுவாங்க . அதுக்கு முன்ன பின்ன என்ன போட்டாலும் நீங்க கண்டுக்க கூடாது .

அப்புறம் இருக்கவே இருக்கு கிரகம் பெல் கண்டுபிடிச்ச கருவி மொக்கைய போடு போடுனு போடுவாங்க ....நெடுந்தொடர் குருன்தொடர் இது எல்லாம் முடுஞ்சு இப்போ ஒரு கூத்து அட அதுதாங்க நம்ம ஊருல வருசத்துக்கு ஒரு தடவ மாரியம்மன் கோவில் நோம்பிக்கு போடுவம் இல்ல ஆடல் பாடல் அப்புறம் இந்த ரெகார்ட் dance இது எல்லாம் இப்போ நம போய் பார்க்க வேண்டாம் அது தானா வர வாரம் உங்க வீடு தேடி வருது.இந்த கொடுமைய குடும்பத்தோட வேற உர்கந்து பார்க்கணும்னு தலைஎழுத்து .

சரி புலம்பாதே ....விடு டிவி பார்க்காதனு நீங்க சொல்லறது தெரியுது.அத தானுங்க சொல்ல வந்தேன் நானா " வேலில போற எதையோ எடுத்து ........ "இந்த பழமொழி
தெரியாதாவங்க நல்லது தான் தெரிஞ்சா அப்புறம் நீங்களும் இப்படி தான் சொல்லுவீங்க ......